விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். நடிகர்கள் ராதிகா, ரவீனா தண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் பெரியளவில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அங்கு, ஜிவி பிரகாஷ் இப்படத்தின் பாடல்களைப் பாடினார்.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சூர்யாவின் இந்தப் படம் வெளியாகும் இதே நாளில் நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Every family has a story.
— Fortune Four Cinemas (@Fortune4Cinemas) August 5, 2026
Every story has a heartbeat. â¤ï¸#VASTrailer arrives on AUGUST 7th. ð#VishwanathAndSons in cinemas on Aug 14th. ð«¶ð»
9 days to go. â¤ï¸âð¥#VASonAUG14th pic.twitter.com/cnnAjXuIEp
Summary
The announcement regarding the trailer of the movie Viswanath and Sons has been released today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எனக்கு புதிய அடையாளமாக இருக்கும்: நடிகர் சூர்யா

இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சூர்யா! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா! என்ன சொன்னார்?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




