விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

நடிகை ஷகிலாவுக்கு என்ன ஆச்சு? கழுத்தில் அறுவைச் சிகிச்சை! செல்போன் காரணமா?

நடிகை ஷகிலாவுக்கு கழுத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறித்து...

Actress Shakila undergoes neck surgery

நடிகை ஷகிலாவுக்கு அறுவைச் சிகிச்சை - Facebook | Shakila

Published On :

நடிகை ஷகிலா அதிகளவில் செல்போன் பயன்படுத்தியதால், தனக்கு கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாகக் கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் வலம் வருபவர் நடிகை ஷகிலா. இவர் தமிழ்த் திரைப்படங்களில் விஜய், அஜித், சிலம்பரசன் உள்ளிட்ட நடிகர்களுடன் சிறு பாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

இந்த நிலையில், இவர் திடீரென கழுத்தில் அறுவைச் சிகிச்சை செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, அவர் விடியோ வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது, நான் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவேன். ஆன்லைன் விளையாட்டுகளை அதிகம் விரும்பி விளையாடுவேன்.

படுக்கையில் ஒரு பக்கமாய்ப் படுத்துக்கொண்டு, பல மணிநேரம் விளையாடுவேன். இதன் விளைவாக கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தற்போது அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்தச் சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் செலவானதுடன், சாப்பிடுவது, நடப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்குக்கூட மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும், குழந்தைகளிடம் செல்போனை பெற்றோர் கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.

அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள நடிகை ஷகிலா, விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Summary

Actress Shakila undergoes neck surgery. Was a mobile phone the cause?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.