ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராணி முகர்ஜி. இவர் பிளாக், நோ ஒன் கில்டு ஜெசிகா, ஹிட்ச்கி உள்ளிட்ட பெண்களை முதன்மையாகக் கொண்ட படங்களில் நடித்தன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நாயகனாக நடித்து வெளியான “ஹே ராம்” படத்திலும் ராணி முகர்ஜி நாயகியாக நடித்திருந்தார். மேலும், இந்திய அரசு வழங்கும் ஒரு தேசிய விருதையும், ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் நடிகை ராணி முகர்ஜிக்கு அந்நாட்டின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் இன்று (ஆக. 14) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இந்தியத் திரைத்துறை, மனிதாபிமான உதவிகள் மற்றும் சமூக நலனுக்கானப் பணிகள் உள்ளிட்டவற்றில் அவரின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Summary
An Australian university has awarded an honorary doctorate to popular Bollywood actress Rani Mukerji.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எளிமையான மேக்அப் -யை விரும்புகிறேன்! அழகின் ரகசியம் பற்றி நடிகை ஷ்ரத்தா கபூர்

செய்தியாளர்களின் சந்திப்பில் பட்வாரா 1947 படக்குழுவினர் - புகைப்படங்கள்

ரூ.300 கோடி பட்ஜெட்டில் பாலிவுட்டில் அறிமுகமாகும் கல்யாணி பிரியதர்ஷன்!

ஆலியா பட்டின் ஆல்ஃபா பட முதல் நாள் வசூல்!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju




