தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

சர்ச்சைகள் எதிரொலி... கீர்த்தி சனோனின் விளம்பரத்தை நீக்கிய நகைக்கடை!

நடிகை கீர்த்தி சனோன் நடித்து சர்ச்சையான விளம்பரம் நீக்கப்பட்டது குறித்து...

Actress Kriti Sanon in the Rocky advertisement.

ராக்கி விளம்பரத்தில் நடிகை கீர்த்தி சனோன் - படங்கள்: இன்ஸ்டா / கீர்த்தி சனோன்.

Published On :

நடிகை கீர்த்தி சனோன் நடித்த விளம்பரம் சமூக வலைதளத்தில் சர்ச்சைகளைக் கிளப்பவே நகைக்கடை நிறுவனம் நீக்கியுள்ளது.

பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தனது சகோதருருக்கு ராக்கி கட்டுவது போல் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் இந்த விளம்பரத்தை கடுமையாக விமர்சித்து, “நமது கலாசாரத்தைக் காக்க விதவிதமான ஆடைகள் இருந்தும் பிகினி / உள்ளாடைகள் அணிந்து சகோதரருக்கு ராக்கி கட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த விமர்சனத்து நடிகை கீர்த்தி சனோன், “கலாசாரம் என்பது இதயத்தில் இருக்கிறது; ஆடையில் இல்லை” என கடுமையான பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நகைக்கடை நிறுவனம் இந்த விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது:

இந்திய கலாசாரம், பண்பாடு மீது நாங்கள் அதிகப்படியான மரியாதையை வைத்துள்ளோம். ஒரு பிராண்ட் நிறுவனமாக இந்தக் கொண்டாட்டங்களை நாம் நமது குடும்பத்துடன் கொண்டாட வேண்டும். அத்துடன் நமது செல்லப் பிராணிகளுக்கு இந்த அன்பையும் கொண்டாட்டத்தையும் கூடுதலாக்க வேண்டும்.

சமூகத்தில் சில பகுதியினரை எங்களது விளம்பரம் காயப்படுத்தி இருப்பதாக அறிகிறோம். அது எங்களது நோக்கமல்ல. மரியாதை நிமித்தமாக, அனைத்து ஊடகத்தில் இருந்தும் அந்த விளம்பரத்தினை வாபஸ் பெறுகிறோம்.

இந்த திருவிழாக் காலத்தில் உங்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும் உருவாக வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் கமெண்ட் செய்ய முடியாதபடிக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Summary

Kriti Sanon's Rakhi ad pulled by jewellery brand after controversy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.