
இளையராஜா இசையில் லெனின் பாண்டியன்! புதிய பாடல் அறிவிப்பு!
லெனின் பாண்டியன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகவுள்ளது குறித்து...

லெனின் பாண்டியன் படத்தின் பாடல் அறிவிப்பு. - படம் - எக்ஸ்
இளையராஜா இசையில் லெனின் பாண்டியன் படத்தின் அடுத்த பாடல் நாளை (ஆக. 29) வெளியாகவுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் லெனின் பாண்டியன்.
டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும் நடிகை ரோஜாவும் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், மூன்றாவது பாடலான “பாண்டி முனி வருகை” என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்தப் படமானது வரும் செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளà¯â¦ பாணà¯à®à®¿ à®®à¯à®©à®¿ வரà¯à®à¯! ð¥ð
— Saregama South (@saregamasouth) August 29, 2026
A divine roar. A mighty force.
A powerful voice.
From the legendary Isaignani Ilaiyaraajaâ¦
A powerful new divine wave begins tomorrow! ð¥#LeninPandiyan 3rd Single#PandiMuniKukkudhu
Tomorrow at 6 PM.
ð¶ @ilaiyaraaja
@ddb2411 #GangaiAmaren⦠pic.twitter.com/OQ5vFNgFSL
Summary
The next song from Lenin Pandian film, featuring music by Ilaiyaraaja, is set to be released tomorrow (August 29).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







