பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது கூட திவ்யாவை நடிகை சான்ட்ரா புறக்கணித்த விடியோ வைரலானது குறித்து...
திவ்யா கணேசன் / சான்ட்ரா
திவ்யா கணேசன் / சான்ட்ராபடம் - எக்ஸ்
Updated on
2 min read

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது கூட திவ்யாவை நடிகை சான்ட்ரா புறக்கணித்த விடியோ இணையத்தில் பலரால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

சான்ட்ரா வெளியேறும்போது பிக் பாஸ் கொடுத்த நினைவுப்பரிசை வழங்கி கட்டியணைக்கச் சென்றபோது திவ்யாவை அவர் புறக்கணித்துவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் சென்றுவிட்டார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் உள்ளனர்.

டிக்கெட் டூ ஃபினாலே வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் அரோரா. பின்னர் கானா வினோத், சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், திவ்யா கணேசன் ஆகியோருடன் சேர்த்து 6 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வாகினர்.

பணப்பெட்டிக்கான போட்டிகள் முடிந்த நிலையில், இறுதிப்போட்டியாளர்களில் ஒருவராக இருந்த கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கானா வினோத்
கானா வினோத்படம் - எக்ஸ்

குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சான்ட்ரா வெளியேற்றப்பட்டார். தற்போது திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என 4 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும். இதில் அதிக வாக்குகளைப் பெறும் நபர் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்படும்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சான்ட்ரா, இன்னும் திவ்யா மீது வன்மத்துடனே இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படும். அந்தவகையில் சான்ட்ராவுக்கான நினைவுப்பரிசை திவ்யா வழங்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டார்.

சான்ட்ராவுக்கு நினைவுப் பரிசை வழங்கி அவரை கட்டியணைக்கச் சென்றபோது திவ்யாவை அவர் புறக்கணித்துவிட்டார். இதனால் மனமுடைந்த திவ்யா, கண்கலங்கி அழுதார். அவருக்கு போட்டியாளர்கள் ஆறுதல் கூறினர்.

ஆனால், சான்ட்ரா அது குறித்து எந்தவித குற்றவுணர்வுமின்றி பிக் பாஸுடன் பேசிவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

வைல்டு கார்ட் மூலம் சான்ட்ரா, திவ்யா கணேசன், ப்ரஜின், அமித் பார்கவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனால் சாண்ட்ராவுக்கு திவ்யா பக்கபலமாக இருந்து வந்த நிலையில், தற்போது திவ்யாவை சான்ட்ரா வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

திவ்யா கணேசன் / சான்ட்ரா
பிக் பாஸ் 9 : கானா வினோத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி!
Summary

Bigg Boss 9 tamil Sandra ignored Divya ganesan even while evicrion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com