SLUMDOG - 33 Temple Road poster
விஜய் சேதுபதியின் புதிய பட போஸ்டர். படம்: எக்ஸ் / சார்மி கௌர்.

விஜய் சேதுபதி - புரி ஜெகந்நாத் படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் குறித்து...
Published on

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் அவரது புதிய பன இந்திய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி முதல்முறையாக இயக்குநர் புரி ஜகந்நாத் இயக்கத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார்.

பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இப்படம் பெரிய செலவில் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. புரியின் தயாரிப்பு நிறுவனமே இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளரான நடிகை சார்மி கௌர் இந்தப் படத்தினை வழங்குகிறார்.

ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு (SLUMDOG - 33 Temple Road) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சம்யுதா, தபு, துனியா விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

SLUMDOG - 33 Temple Road poster
4 நாள்களில் ரூ.200 கோடி வசூல்..! சிரஞ்சீவிக்கு கம்பேக் கொடுத்த அனில் ரவிபுடி!
Summary

On actor Vijay Sethupathi's birthday, his new pan-Indian film has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com