
4 மடங்கு லாபம் ஈட்டிய பிளாஸ்ட்..! மகிழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்!
பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூலினால் மகிழ்ந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவு குறித்து...

பிளாஸ்ட் திரைப்படத்தின் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / ஏஜிஎஸ் புரடக்ஷன்ஸ்.
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் உருவான பிளாஸ்ட் திரைப்படம் கடந்த மே 28ஆம் தேதி வெளியாகி, மக்களிடையே கிடைத்த ஆதரவினால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் தற்போது மொத்தமாக, ரூ.76 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வாக அறிவித்துள்ளது. இந்தப் படம் ஜூன் 25ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொகேன், பவன், திலீபன் என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் ரூ.18 கோடியில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வசூலில் 4 மடங்கு அதிகமாக அதாவது ரூ. 76 கோடி ஈட்டியுள்ளது.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் சிறப்புப் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்கள், ஊடகங்கள், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
76 CRORES+ WORLDWIDE GROSS ð¥
— AGS Entertainment (@Ags_production) July 4, 2026
Every ticket, every cheer, every celebration has brought us here.
A heartfelt thank you to our audience, media & every member of the cast and crew for making #Blast a certified #Blastbuster ð¤
This victory belongs to all of you â¤ï¸
ðï¸â¦ pic.twitter.com/dHFriKDvRh
Summary
Arjun, abhirami starring Blast a certified Blastbuster, ags thanks for audience
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







