FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

வெளியானது லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படத்தின் 15 பாடல்கள்..! அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படத்தின் 15 பாடல்கள் வெளியாகியுள்ளது குறித்து...

News image

டிசி படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / அனிருத்

Updated On :25 ஜூலை 2026, 12:59 pm IST

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படத்தின் 15 பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்த இசை ஆல்பத்தை இசையமைப்பாளர் அனிருத் உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக ’டிசி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகுகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 24) நடைபெற்றது.

இந்தப் படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கேபியும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளார்.

ராகா ஆஃப் ரிவெஞ்ச் மற்றும் டிரைலரில் வரும் இசைத்துணுக்குகளால் இந்தப் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆல்பத்தில் விஷால் மிஷ்ரா, அஸ்வின் குமார், ஷிவபிரியா ஆகியோர் பாடியுள்ளார்கள். இந்தப் படம் ஆக.7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Summary

Makers of Lokesh Kanagaraj - Arun Matheswaran's DC release full 15 track album

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.