தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜிசிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டு
/

148 மடங்கு லாபம் பெற்ற ஹாரர் திரைப்படம்..! இந்தியாவிலும் அதிகரிக்கும் வரவேற்பு!

இந்தியாவிலும் வரவேற்பைப் பெறும் அமெரிக்க ஹாரர் திரைப்படம் குறித்து...

News image

அப்செஸன் படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / ஃபோகஸ் பியூச்சர்ஸ்.

Updated On :2 ஜூன் 2026, 7:56 pm IST

ஹாலிவுட் பட இயக்குநர் கர்ரி பார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’அப்செஸன்' என்ற ஹாரர் திரைப்படத்துக்கு இந்தியாவிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் அமெரிக்காவில் கடந்த மே 15ஆம் தேதி வெளியாக, இந்தியாவில் மே 29ஆம் தேதி வெளியாகியது.

இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 1 மில்லியன் டாலர் (10 லட்சம் டாலர்) அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரைக்கும் ரூ.148 மில்லியன் டாலர் (14.8 கோடி டாலர்) வசூலித்துள்ளது. 148 மடங்கு லாபம் சம்பாதித்து அசத்தியுள்ளது.

இந்தப் படத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன் கதாபாத்திரத்தில் பியர், அவரது காதலி இண்டே நவரெட் கதாபாத்திரத்தில் நிக்கியும் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான ஹிந்தி படமான சந்தே மேரே தொல் என்ற படத்தைவிட இந்தப் படம் அதிகமாக வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தப் படம் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலும் வரவேற்பு பெறும் இந்தப் படம், இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ.11.5 கோடி வசூலித்து ஆச்சரியம் அளித்துவருகிறது.

Summary

Obsession box office collection day 4: A Horror Film That Earned 148 Times Its Investment! Growing Popularity in India as Well!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.