நடிகை பிரியங்கா மோகனுக்கு மேட் இன் கொரியா திரைப்படம் பல அங்கீகாரங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரைத்துறையில் சரிவிலிருந்த நடிகை பிரியங்கா மோகன், ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படத்தில், தமிழகத்திலிருந்து தென்கொரியா சென்று வாழ்க்கையை வாழ நினைக்கும் பெண்ணின் கதையாக எடுக்கப்பட்டிருந்தது.
இப்படம் இந்திய ரசிகர்களிடம் கவனமடைந்ததுடன் தென்கொரியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நெட்பிளிக்ஸிலும் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக சில வாரங்கள் முன்னணியில் இருந்தது. இதனால், நெட்பிளிக்ஸ் நிர்வாகம் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

தென்கொரிய கௌரவத் தூதரான போது..
தற்போது, தென்கொரிய அரசு பிரியங்கா மோகனைக் கௌரவிக்கும் விதமாக அவரைச் சுற்றுத்துறையின் கௌரவத் தூதராக நியமித்துள்ளது.
இதுகுறித்து பதிவிட்ட பிரியங்கா, “தென்கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டது உண்மையிலேயே சிறப்பானது. கொரிய கலாசாரத்தை இந்தியர்களுக்கு என் மூலம் கடத்தியதை ஏற்றுக்கொண்ட தென்கொரிய அரசுக்கும் சுற்றுலாத்துறை அமைப்பிற்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
ஒரே திரைப்படத்தின் மூலம் உலகளவில் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறிய பிரியங்கா மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
The South Korean government has appointed actress Priyanka Mohan as an Honorary Tourism Ambassador.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென் கொரியா சுற்றுலாத் துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

மஞ்சணத்தியில் நாயகிகளாக பிரியங்கா மோகன், கயாடு லோஹர்!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!
விடியோக்கள்

இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட விடியோ! | VCK

முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை | Annamalai | BJP | Modi | Annamalai new party

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி




