இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இமயம் என திரையுலகினரால் அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை உடல்நலக் குறைவால் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இதையடுத்து, நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
“தமிழ் சினிமா எனும் ஆழ்கடலில் தனி ஆளாய் எதிர்நீச்சலிட்டு கரை கண்ட இமயம்; காலமெனும் முடிவிலியில் தன் படைப்புகளால் நங்கூரமிட்டு என்றும் சுடர்விடும் கலங்கரை விளக்கம் - பாரதிராஜா!
தமிழ் சினிமா உள்ளவரை என்றென்றும் நீங்கள் நினைவுக்கூரப்படுவீர்கள் ஐயா! “ எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தேனியில் நாளை நடைபெறவுள்ள பாரதிராஜாவின் இறுதிச்சடங்கிற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Music composer Hiphop Tamizha Adhi has expressed his condolences over the passing of director Bharathiraja.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
கிராமிய வாழ்வு, மனித உணர்வுகளை வெளிப்படுத்திய படைப்புகள்! பாரதிராஜாவுக்கு ஆளுநர் இரங்கல்
எனக்கும் அவருக்குமான உறவு... பாரதிராஜா உடலுக்கு இளையராஜா அஞ்சலி!

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2! புதிய பாடல் வெளியீடு!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!




