சமுத்திரக்கனி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய இணையத் தொடர் இசகப்பட்டினம்.
இந்த இணைய தொடர் அதிரடி கலந்து கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை கேரி பி.ஹெச். இயக்கியுள்ளார்.
திரைக்கதையை பிரசாந்த் ரகதியும் வசனத்தை தாஜுதீன் சையத்தும் எழுதியுள்ளனர். தமடா மீடியா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ராகுல் தமடா மற்றும் சாய்தீப் ரெட்டி போரா ஆகியோர் இந்தத் தொடரை தயாரிக்கிறார்கள்.
மேலும் இந்தத் தொடரில் சுனில், நரேஷ் அகஸ்தியா, மெரின் பிலிப், ரோகினி, ரவி வர்மா மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக வட சென்னை மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக இசகப்பட்டினம் தொடரில் ஒன்றாக நடிக்கிறார்கள்.
சித்தாந்தம் மற்றும் சமூக நீதி தொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் மோதலைப் பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7 எபிசோடுகள் கொண்ட இசகப்பட்டினம் தொடர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
Summary
The release date for the new web series starring Samuthirakani and Aishwarya Rajesh has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










