பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அனுமன் சிக்கல்... ஸ்ரேயா ரெட்டி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு!

நடிகை ஸ்ரேயா ரெட்டி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து...

Glimpses shared by actress Shriya Reddy.

நடிகை ஸ்ரேயா ரெட்டி பகிர்ந்த காட்சிகள். - படங்கள்: இன்ஸ்டா / ஸ்ரேயா ரெட்டி.

Published On :

நடிகை ஸ்ரேயா ரெட்டி (48 வயது) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுமன் சிக்கல் என்ற தத்துவார்த்தமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் சிலம்பம் சுற்றும் விடியோவைப் பகிர்ந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

சாமுராய் படத்தில் அறிமுகமான நடிகை நடிகை ஸ்ரேயா ரெட்டி, திமுரு படத்தில் வில்லியாக நடித்து புகழ்ப்பெற்றார். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடித்துவரும் இவர் சுழல் இணையத் தொடர் மூலம் கவனம் பெற்றார்.

நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கு 48 வயதாகிறதெனக் கூற முடியாத அளவுக்கு தனது உடல்நலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்.

உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் கொண்ட ஸ்ரேயா ரெட்டி சில வாரங்கள் முன்னதாக களரிப்பயட்டு பயின்றுவரும் விடியோவைப் பகிர்ந்திருந்தார்.

தற்போது சிலம்பம் சுற்றவும் கற்றுக்கொண்டுள்ளார். அந்த விடியோவைப் பகிர்ந்து மிகவும் சிந்திகக்கூடிய பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

திரும்பவும் வருவதற்கு ஒரே நேரத்தில் ஓர் அடி மட்டுமே எடுத்து வைக்க வேண்டும்! உண்மையில் நாம் யார் என்பதை வாழ்க்கை நமக்கு நினைவுகூறாதவரையில் தி அனுமன் காம்பிளக்ஸ் போல நமது சொந்த பலத்தையே மறந்துவிடுவோம்.

கடலை தாண்டும் முன்பு அனுமனுக்கே தனது சக்தியை அறிய ஜாம்பவான் தேவைப்படுகிறார். சில நேரங்களில், நாம் யார் என்பதை உணர்த்த சிலர் தேவைப்படுகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

Summary

The Hanuman Complex actress sriya reddy shared philosophical thoughts through her silambam video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.