உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அவதார்: தி லாஸ்ட் ஏர்பென்டர் சீசன் 2 டிரைலர்!

இணையத்தில் வைரலாகும் அவதார்: தி லாஸ்ட் ஏர்பென்டர் சீசன் 2 டிரைலர் குறித்து...

Avatar: The Last Airbender Season 2 Poster

அவதார்: தி லாஸ்ட் ஏர்பென்டர் சீசன் 2 போஸ்டர். - படம்: எக்ஸ் / நெட்பிளிக்ஸ்.

Published On :

ஆல்பெர்ட் கிம் உருவாக்கிய அவதார்: தி லாஸ்ட் ஏர்பென்டர் சீசன் 2 என்ற இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

காற்றின் மூலம் பொருள்களைக் கட்டுப்படுத்தி சண்டையிடும் கதாபாத்திரங்களின் கதையாக உருவாகியுள்ளது அவதார்: லாஸ்ட் ஏர்பென்டர். நெட்பிளிக்ஸில் வெளியாகும் இந்தத் தொடருக்கு ரசிகர்களிடையே மிகுந்த ஆதரவு இருந்து வருகிறது.

முன்னதாக அனிமேஷனாக வெளியான இந்தத் தொடரின் லைவ் ஆக்‌ஷன் பாணியில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பார்வையில் உடல்ரீதியான பலம்கொண்ட வீரர்களும் சூப்பர்பவர் கொண்டவர்கள் மோதும் சண்டைக் காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன.

உலகெங்கும் நடைபெறும் போர் மெல்ல மெல்ல எர்த் கிங்டமில் இருக்கும் பா சிங் சே இடத்துக்கு வருகிறது. இந்த சீசனில் முக்கியமான நான்கு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர்க் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சீசனில் காற்று, நீர், நெருப்பு, பூமியை எப்படி கட்டுப்படுத்துவது என ஆங்க் கற்றுக்கொள்கிறார். கதையின்படி எர்த் கிங்கை அவர்களது போரில் பங்கெடுக்க ஆங்க் மற்றும் அவரது நண்பர்கள் ஆதரவு கேட்பதுபோல் இருக்கிறது.

நெட்பிளிக்ஸில் இந்தத் தொடர் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நிக்கலோடியன் தயாரிப்பில் உருவாகிய அவதார்: தி லாஸ்ட் ஏர்பென்டர் 3 சீசன்களாக அனிமேஷனில் 2005-08 வரை வெளியாகியிருந்தது.

இதன் முதல் பாகம் கடந்த 2024ல் 8 எபிசோடுகளாக வெளியாகியிருந்தது. சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

Summary

The official trailer for Avatar: The Last Airbender Season 2 has arrived

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.