ஃபேமிலி பாய் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேமிலி பாய் திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் த்ரில்லராக உருவாகி வரும் இத்திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சரியா.. சதியா...’ எனத் தொடங்கும் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிடப்பட்டுள்ளனர்.
கார்த்திக் கே கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

