பழிவாங்குதல் திருப்தியளிக்கலாம்... மீண்டும் பகிரப்பட்ட சண்டியர் போஸ்டர்!
சண்டியர் போஸ்டர் மீண்டும் பகிரப்பட்டுள்ளது...

நடிகர் கமல் ஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் சண்டியர் திரைப்படத்தின் போஸ்டர் மீண்டும் பகிரப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஹானின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். முழு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர்.
மதுரையைப் பின்னணியாக வைத்து இதன் கதை எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் என்றே கமல் ஹாசன் பெயரிட்டிருந்தார். ஆனால், அன்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் பெயரை மாற்றினார்.
தற்போது, மீண்டும் சண்டியர் திரைப்பட பெயருடன் வந்துள்ளார். இதனைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். இப்பெயரை மாற்றவில்லை என்றால் படம் வெளியாகாது என்றும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே பகிர்ந்த சண்டியர் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பகிர்ந்து, “பழிவாங்குதல் திருப்தியைத் தரலாம். ஆனால்...” எனக் குறிப்பிட்டுள்ளனர். படப்பெயர் சர்ச்சையாகியுள்ள சூழலில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போஸ்டர் பகிரப்பட்டதா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
The poster for actor Kamal Haasan's film Sandiyar has been shared once again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


