தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

18 திரையரங்க வடிவங்களில் வெளியாகும் வாரணாசி?

சினிமா வரலாற்றில் புதிய சாதனைச் செய்யவுள்ள வாரணாசி....

Updated On :

நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் வாரணாசி திரைப்படம் 18 திரையரங்க வடிவங்களில் வெளியாகவுள்ளதாம்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வாரணாசி. கதையாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக இதன் பணிகள் நடைபெற்று வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய சினிமாவின் அடுத்தகட்ட பாய்ச்சலாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

இப்படத்தில் நாயகனாக மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். ராஜமௌலியின் முந்தைய படமான 'ஆர்ஆர்ஆர்'-க்காக ஆஸ்கர் விருது வென்ற எம். எம். கீரவாணி 'வாரணாசி' படத்திற்கு இசையமைக்கிறார்.

ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன. ஆயிரம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் திரையரங்க வெளியீட்டை ஐமேக்ஸ், டால்பி விஷன், 4 டிஎக்ஸ் (4 DX) உள்பட 18 திரையரங்க வடிவங்களில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனராம். இதுவே, இந்தச் சாதனையை செய்யும் முதல் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. உலக அளவில் இப்படத்தைக் கொண்டு செல்வதற்கான வழிகளிலும் இந்த முயற்சி பெரிய உதவியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

The film Varanasi, starring actor Mahesh Babu, is set to be released in 18 different theatrical formats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.