
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை பின்னுக்குத் தள்ளிய காஸா ஆவணப்படம்! வசூலில் முதலிடம்!
காஸா குறித்த ஆவணப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தைப் பின்னுக்குத் தள்ளி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது குறித்து...

அவெஞ்சர்ஸ் பட போஸ்டர் - நாஸா ஆவணப்பட இயக்குநர்கள் யுவல் ஆப்ரஹாம் மற்றும் ரேச்சல் ஸ்சோர் - எக்ஸ்/AP
இத்தாலி நாட்டில் வெளியான காஸா குறித்த ஆவணப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தைப் பின்னுக்குத் தள்ளி வசூலில் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களைக் குறித்து உருவாக்கப்பட்ட “நாஸா” எனும் 80 நிமிட ஆவணப் படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்து வருகிறது.
ஆஸ்கர் விருதுபெற்ற இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆப்ரஹாம் மற்றும் ரேச்சல் ஸ்சோர் ஆகியோர் இயக்கிய இந்த ஆவணப் படம், இத்தாலி நாட்டின் திரையரங்குகளில் கடந்த திங்கள்கிழமை (செப். 28) அன்று வெளியானது.
இந்த நிலையில், நாஸா ஆவணப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.4 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும், செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி அதன் வசூல் ரூ.11 கோடிக்கும் (1.1 மில்லியர் யூரோ) அதிகமாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இத்தாலியில் முதல் இரண்டு நாள்களில் ரூ.3.48 கோடி வசூலித்ததாக, தி கார்டியன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் மக்கள் குடியிருப்புகளைக் குறிவைத்து, அங்குள்ள பாலஸ்தீனர்களைக் கொல்லும் நோக்கத்துடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்த இந்த ஆவணப்படத்தின் படப்படிப்பு ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாலியில், வெறும் மூன்று நாள்களுக்கு மட்டுமே திரையிடத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்துக்கு அந்நாட்டு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளதால், திரையிடும் நாள்கள் மேலும் நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட “நாஸா” ஆவணப்படத்துக்கு பார்வையாளர்கள் சுமார் 25 நிமிடம் எழுந்து நின்று கைட்டல்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that a documentary about Gaza released in Italy has surpassed Avengers: Endgame to take the top spot at the box office.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






