ஓடிடியில் ஐஆம் கேம் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?
ஐஆம் கேம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

ஐஆம் கேம் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
துல்கர் சல்மான் நாயகனாக நடித்து வெளியான ஐஆம் கேம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ஐஆம் கேம். துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் இப்படத்தைத் தயாரித்திருந்தது.
ஆனால், இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்ததால், வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது. சூதாட்டத்தை மையப்படுத்திய திரில்லர் திரைப்படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்தப் படத்தில் கதிர், கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஐஆம் கேம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் அக். 16 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Details regarding the OTT release of the film I Am Game, starring Dulquer Salmaan, have been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

