சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

உடல் எடையைக் குறைத்த நடிகர் சக்தி வாசு!

நடிகர் சக்தி வாசு தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்...

நடிகர் சக்தி வாசு

Published On :3 செப்டம்பர் 2026, 1:00 pm IST

நடிகர் சக்தி வாசு உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

இயக்குநர் பி. வாசுவின் மகனான நடிகர் சக்தி சினிமாவில் அறிமுகமான காலங்களில் கதையம்சமுள்ள படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். முக்கியமாக, தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்கள் சக்திக்கு நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தன.

ஆனால், மெல்ல மெல்ல சினிமாவிலிருந்து அவருக்கான வாய்ப்புகள் குறைய, நடிப்பதையும் நிறுத்தினார். பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார். தற்போது, நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, சக்தி நடித்த அனலி திரைப்படத்தின் குஜிலி கும்பா என்கிற பாடலில் அவருடைய ஆடையும் தோற்றமும் ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்ததால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டார்.

தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் நடிகர் சக்தி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இது கராத்தே பாபு படத்திற்காக. நீங்கள் விரைவிலேயே என்னை இப்படிப் பார்க்கப் போகிறீர்கள். நான் உடற்பயிற்சி செய்யும்போது என்னுடைய மனதின் சக்தி அதிகரிக்கிறது. யாரெல்லாம் என்னைக் கொந்தளிக்கச் செய்தார்களோ அவர்களுக்கு நன்றி. இது எனக்கு புதிதில்லை. போதுமான அளவு பார்த்துவிட்டேன். உண்மையில், இது என்னை ஊக்கப்படுத்துகிறது. டிரிகருக்கே (trigger) டிரிகர் கண்டுபிடிச்சவன் நான்தான். யாரையும் காயப்படுத்தவில்லை. நீங்கள் விரைவிலேயே என்னைச் சந்திப்பீர்கள்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், உடல் எடையைக் குறைத்த புகைப்படங்களைச் சக்தி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள், “திரும்பி வாங்க” என அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

Actor Sakthi Vasu has lost a significant amount of weight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.