
அறிவு - ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டர்!
விஜயகுமார் நடித்துவரும் அறிவு திரைப்படத்தின் போஸ்டர்...

நடிகர் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்கும் அறிவு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
உறியடி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜயகுமார். தொடர்ந்து, உறியடி - 2 மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.
அதன்பின், சில ஆண்டுகள் கழித்து ஃபைட் கிளப் என்கிற திரைப்படத்தின் மூலம் ஆக்சன் நாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜயகுமார் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அறிவு எனப் பெயரிட்டுள்ளனர். கயல் ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். டி. இமான் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் நாளான இன்று அறிவு திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கருப்பு வெள்ளை போஸ்டரில் மலைவாழ் பெண்கள் இடம்பெற்றுள்ளதால் இப்படல் மலை கிராமங்களில் கல்வியைக் கொண்டு செல்லும் நாயகனின் கதையாக உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
The poster for the film Arivu, starring actor Uriyadi Vijayakumar in the lead role, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






