பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

169 நிமிஷ அனுபவத்தை நேரடியாகத் திரையரங்கில் பெறுங்கள்: ஸ்ரீகாந்த் ஒடேலா

தி பாரடைஸ் பட இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பேசியிருப்பதாவது...

Director Srikanth Odela

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா - படம்: எக்ஸ் / தி பாரடைஸ்

Published On :

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக கயாது லோஹர் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ், மோகன் பாபு, சோனல் குல்கர்னி நடித்துள்ளார்கள்.

எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். அதில் படத்தின் டிரைலர் வெளியாகாது என நானி தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசும் போது, “தி பாரடைஸ் படம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பேசும் போது, "வெளியீட்டில் சிறிய தாமதம் ஏற்பட்டிருந்தாலும், படத்தின் கிளிம்ஸ், டீசர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

இது ஒரு புரட்சிகரமான தாய் - மகன் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டது. அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும் பேசுகிறது. 'பிறப்பும் இறப்பும் நமக்கானது, ஆனால் வாழ்வு நாட்டுக்கானது' என்ற கலோஜியின் வரிகளுக்கு ஏற்ப, தங்கள் உரிமைக்காகப் போராடும் மனிதர்களின் கதையே இது. படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள். ரசிகர்கள் இந்த உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நேரடியாகத் திரையரங்கில் பெற வேண்டும் என்பதற்காக டிரெய்லர் எதுவுமின்றி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

Summary

Experience the 169-minute journey firsthand in theaters: Srikanth Odela

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.