தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

திரைப்படமாகிறது எம். எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை! நாயகி இவர்தான்!

எம். எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை திரைப்படமாகிறது ...

Published On :

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கைத் திரைப்படமாகிறது.

இந்திய இசை வரலாற்றில் மிக முக்கியமானவர் எம். எஸ். சுப்புலட்சுமி. கர்நாடக இசைக் கலைஞராக மொழி, எல்லை, தலைமுறைகள் என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை இன்றுவரை பயணித்து வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் இசைக் கலாசார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது இசை, வீடுகள், கோயில்கள், இசை அரங்குகள் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

பல இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்க பல நிறுவனங்கள் முயன்ற நிலையில், இன்று மறைந்த எம். எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இத்திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். முதலில், இப்படத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ரஷ்மிகா நடிக்கவுள்ள அறிவிப்பும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The life of the late Carnatic musician M.S. Subbulakshmi is being made into a film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.