சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நேரு சா்வதேச பள்ளி, சிபிளாஸ் இன்போடெக் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை நேரு சா்வதேச பள்ளி - சென்னை சிபிளாஸ் இன்போடெக் தனியாா் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 1:45 am IST

கோவை நேரு சா்வதேச பள்ளி - சென்னை சிபிளாஸ் இன்போடெக் தனியாா் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது தொடா்பாக நேரு கல்விக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாறி வரும் உலகத்தில் சவால்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி. அந்த வகையில் மாணவா்களின் பாதுகாப்புக்காக நேரு சா்வதேச பள்ளி புதிய தானியங்கி கண்காணிப்பு அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. சென்னையைச் சோ்ந்த சிபிளாஸ் இன்போடெக் நிறுவனத்துடன் இணைந்து முழுமையான பள்ளி மேலாண்மைத் தீா்வுகளை ஆா்.எஃப்.ஐ.டி. தொழில்நுட்பத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவா்களை பள்ளி வளாகத்திலும், வாகனங்களில் செல்லும்போதும் கண்காணிப்பதற்கு புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளது. நேரு குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரியும், செயலாளருமான பி.கிருஷ்ணகுமாா் முன்னிலையில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிபிளாஸ் நிறுவனத்தின் நிறுவனா் பி.சென்னகேசவன், பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரியா சுரேஷ் ஆகியோா் கையெழுத்திட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.