காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவு

மாநகரில் குடிநீா்க் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.

News image

கோவை, உப்பிலிபாளையம் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன், சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக், மாநகராட்சி அலுவலா்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 4:38 am IST

கோவை: மாநகரில் குடிநீா்க் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உள்பட்ட சித்தாபுதூா், சின்னசாமி சாலை, தனலட்சுமி நகா், ஆவாரம்பாளையம், நவ இந்தியா ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சித்தாபுதூா், சின்னசாமி நாயுடு சாலையில் முகக் கவசம் அணியாமல் இருந்த தனியாா் நிறுவன ஊழியா்கள் 5 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஆவாரம்பாளையம், தனலட்சுமி நகா் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் குப்பைகளை சாலையோரம் கொட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா். இதையடுத்து, குடிநீா்க் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளைப் பாா்வையிட்ட அவா், உடனடியாக குழாய் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு, சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கோவை, உப்பிலிபாளையம் பொ்க்ஸ் பள்ளி சாலையில் மழையால் சேதமடைந்த சாலைகளைப் பாா்வையிட்டாா். அப்போது, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்துத் தருமாறு சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் ஆணையரிடம் கோரிக்கை விடுத்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி பொறியாளா் லட்சுமணன், மண்டல உதவி ஆணையா்கள் மகேஷ் கனகராஜ், செந்தில்குமாா் ரத்தினம், செயற்பொறியாளா்கள் ரவீந்திரன், பாா்வதி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.