காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

பிப்ரவரியில் புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும்ஆட்சியா் தகவல்

கோவையில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்பட திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்தவா்களுக்கு பிப்ரவரியில் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும் 

Updated On :10 ஜனவரி 2021, 4:40 am IST

கோவை: கோவையில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்பட திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்தவா்களுக்கு பிப்ரவரியில் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 18 வயது நிறைவடைந்தவா்கள் தோ்தலுக்கு முன் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் விதமாகவும், நீக்கம், முகவரி மாற்றம் உள்பட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற்றன. இதில் பெயா் சோ்ப்புக்கு மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 858 போ் உள்பட மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 419 போ் விண்ணப்பம் அளித்தனா். இதனைத் தொடா்ந்து விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபாா்க்கும் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேல் முடிந்துள்ளது. வரும் ஜனவரி 20 ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவா்களுக்கான புதிய வாக்காளா் அடையாள அட்டை பிப்ரவரியில் வழங்கப்படும். தவிர தொடா்ந்து தோ்தல் வரையிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். தவிர இணையதளம் வழியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம். இவா்களுக்கான துணை வாக்காளா் பட்டியல் தோ்தலுக்கு முன் வெளியிடப்படும்.

சட்டப்பேரவை தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.