தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள்: கமல்ஹாசன்

சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என கோவை துடியலூர் பிரசாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News image

கோவை துடியலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன்.

Updated On :11 ஜனவரி 2021, 1:49 pm IST

சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என கோவை துடியலூர் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை துடியலூர் பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. 
இந்த தேர்தல் சரித்திரம் நமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பு.

இந்த தேர்தல் கட்சிக்கும், கட்சிக்குமான போர் அல்ல. ஊழலுக்கும், நேர்மைக்குமான போர். இது பணம் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல. அன்பால் கூடிய கூட்டம். 3 மாதங்களுக்கு பிறகும் இதேபோல வாழ்க்கை வாழ போகிறோமா? தமிழகத்தை சீரமைக்க போகிறோமா?

செய்த தவறை திரும்ப செய்பவர்களை அறிவுரை சொல்லி மாற்றத்திற்கு வாக்களிக்க செய்யுங்கள். சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள். சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.