குடியரசு தினவிழா ஏன் கொண்டாடுகிறோம்? வாசகர்களே ஜனவரி மாத காணொளி போட்டிக்கு நீங்க ரெடியா!

நமது சுதந்திர தினவிழாவைக் காட்டிலும் நாம் கூடுதல் சிறப்புடன் கொண்டாடித் தீர்க்க வேண்டியது நமது குடியரசு தினவிழாவைத்தான். ஏன் தெரியுமா?
குடியரசு தினவிழா ஏன் கொண்டாடுகிறோம்? வாசகர்களே ஜனவரி மாத காணொளி போட்டிக்கு நீங்க ரெடியா!
Published on
Updated on
1 min read

ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ குடியரசு தினவிழாவாகக் கொண்டாடி வருகிறோம். அன்று குடியரசு தினவிழா சிறப்புக் கொண்டாட்டமாக முப்படை அணிவகுப்புகள் நடக்கும். அதைத்தாண்டி பெரிதாக கொண்டாட்டங்கள் ஏதும் இருந்ததில்லை. பள்ளிகளில் ஆகஸ்டு 15 சுதந்திர தினவிழாவுக்காவது காலையில் மாணவர்களை வரச்சொல்லி தேசியக் கொடியேற்றி மிட்டாய் தந்து அனுப்பி அந்தநாள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுமே தவிர குடியரசு தினவிழாவுக்கென சிறப்புக் கொண்டாட்டங்கள் எதையும் நாம் இதுவரை கண்டதில்லை. அது அதன்பாட்டில் ‘நாளை மற்றொரு நாளே’ என்பதாகக் கழிவதைப் போலவே தோற்றம் தரும். ஆனால், உங்களில் எவருக்கேனும் தெரியுமா? நமது சுதந்திர தினவிழாவைக் காட்டிலும் நாம் கூடுதல் சிறப்புடன் கொண்டாடித் தீர்க்க வேண்டியது நமது குடியரசு தினவிழாவைத்தான். 

ஏன் தெரியுமா?

1. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா ஏன் அனுசரிக்கப்படுகிறது?

2. அந்நாளின் தனிச்சிறப்பு என்ன?

3. அந்நாளை நாம் சிறப்புறக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன?

மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கான பதிலை தேசப்பற்று மிகுந்தூர மிகத்தெளிவாக உங்களால் முன்வைக்க முடியுமென்றால் எடுங்கள் உங்கள் அலைபேசியை... உங்களது அருமையான பதில்களை நறுக்குத் தெறிந்தாற் போல வெகு கச்சிதமாகக் கூறி காணொளியில் பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.

சிறந்த பதில்களுக்கு எப்போதும் போல தினமணி. காமின் சிறப்புப் பரிசுகள் உண்டு.

அத்துடன் சிறந்த பதில்களைக் கொண்ட காணொளிகள்  தினமணி யூ டியூப் தளத்தில் ‘பெஸ்ட் சிட்டிஸன்’ என்ற பெயரில் ஒளிபரப்பப்படும்.

வாசகர்கள் தங்களது பதில்களைக் 5 முதல் 10 நிமிடக் காணொளியாக்கி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

dinamani.readers@gmail.com

பதில்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய இறுதித் தேதி:

ஃபிப்ரவரி  10

வாசகர்களே வித்யாசமான போட்டிகளுக்கு எப்போதும் நாங்கள் ரெடி... பதில் சொல்ல நீங்கள் ரெடியா?

வாருங்கள்! ஒவ்வொரு மாதமும் தினமணி.காமின் புதுமையும், புதினமும் போன்ற வித்யாசமான போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமைகளைப் பட்டை தீட்டிக் கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com