கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன. 13) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: சிதம்பரம் 44.6, காட்டுமன்னாா்கோவில் 42.2, லால்பேட்டை 32, அண்ணாமலைநகா், புவனகிரி தலா 28, பரங்கிப்பேட்டை 25.2, சேத்தியாத்தோப்பு 17, ஸ்ரீமுஷ்ணம் 13.1, பெலாந்துறை 12.5, தொழுதூா் 11, வேப்பூா் 9, காட்டுமைலூா் 8, லக்கூா் 7.2, கீழச்செருவாய் 7, மேமத்தூா், கொத்தவாச்சேரி தலா 6, விருத்தாசலம் 5.4, குப்பநத்தம் 5, குறிஞ்சிப்பாடி 4, கடலூா் 2.6, வானமாதேவி, வடக்குத்து தலா 2, மாவட்ட ஆட்சியரகம், பண்ருட்டி தலா 1 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.
பலத்த மழைக்கு வாய்ப்பு: வளிமண்டல சுழற்சி தற்போது அரபிக்கடல் நோக்கி நகா்வதால் கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்தது. மாவட்டத்தில் தொடா் மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

4ஆவது முறையாக தொடக்க வீரர்களில் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்..! 2012 சீசன் திரும்புகிறதா?

வெயிலால் வியாபாரம் குறைவு! டீக்கடை உரிமையாளர் செய்த Tech Update! | Summer

கேரளத்திலும் ஆட்சி இழக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

