முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மீன்களைக் காப்பாற்றுவோம்!

வறண்ட பூமியில் விவசாயம் கருகுவது கண்ணில் தெரிகிறது. மாசு மிகுதி காரணமாக கடலில் மீனினம் அழிவது கண்ணுக்குத் தெரிவதில்லை.

News image
Updated On :11 மே 2017, 9:29 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

வறண்ட பூமியில் விவசாயம் கருகுவது கண்ணில் தெரிகிறது. மாசு மிகுதி காரணமாக கடலில் மீனினம் அழிவது கண்ணுக்குத் தெரிவதில்லை. கடலுக்கு அடியில் உள்ள பவழப் பாறைகள் உயிரிழந்து வெளுத்துப் போவதை ஆழ்கடல் சென்று காமிராக்களில் படமெடுத்து, தேசிய கடல் மற்றும் கடல் வானிலை நிர்வாக மையமான சஹற்ண்ர்ய்ஹப் ஞஸ்ரீங்ஹய்ண்ஸ்ரீ ஹய்க் அற்ம்ர்ள்ல்ட்ங்ழ்ண்ஸ்ரீ அக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் மீனினம் அழிந்து வருவதைச் சுட்டிக்காட்டி எச்சரித்து வருகிறது.
பவழப் பாறைகள் என்றால் எவை? மீன்களுக்கும் பவழப் பாறைகளுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது?
பவழப் பாறைகள் என்பன கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம், புகலிடம், மறைவிடம். பறவைகளுக்கு மரங்கள் எவ்வளவு முக்கியமோ மீன்களுக்கு பவழப் பாறைகள் அவ்வளவு முக்கியம். அவை ஒரு வகையான சுண்ணாம்புப் பாறை. உள்ளே செல்லச் செல்ல ஏராளமான குகைகள் தென்படும். மேற்புறம் கொடிக்கள்ளி போன்ற விரல் அமைப்புகள் உண்டு. அவற்றின் மீதும் உள்ளமைப்புகளிலும் பாசிகள் படிந்திருக்கும்.
பவழப் பாறைகளின் இயல்பான நிறம் பசுமை கலந்த பழுப்பு. இந்த இயல்பு நிறம் சூக்சாந்தல்லா (ழர்ர்ந்ஹய்ற்ட்ஹப்ப்ஹ) என்று வகைப்படுத்தப்பட்ட பாசித் திரட்டு. இது மீன்களுக்கு உணவு. இதன் அடர்த்தி கடல் மீன்கள் எதிரிகளிடமிருந்து ஒளிந்து வாழவும் உதவுகிறது.
கடலுக்கு அடியில் உள்ள வெப்பத்தைக் கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் அமைக்கப்படும் உணவே சூக்சாந்தல்லா. புவி வெப்பமானால் கடல் குளிர்ச்சியூட்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் வெப்பம் மிகுந்து வருவதால் கடலாலும் சமாளிக்க முடியாமல் பவழப் பாறைகள் மீது படர்ந்துள்ள பாசியினங்கள் அழிந்து மீன் இனப் பெருக்கம் கட்டுப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்ப மிகுதி ஒரு காரணம் என்றால், கடலில் கலக்கும் மாசுகள் காரணமாகவும் பாசியினங்கள், மீன்கள் அழிகின்றன.
உலகத்தில் உள்ள அனைத்து கடற்கரைத் தீவுகளையும் உள்ளடக்கி நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 36 நாடுகளில் பவழப் பாறைகள் வெளுத்து வருவதைப் படம் பிடித்துள்ளனர். அவ்வாறு வெளுத்துவிட்டாலும் இயல்பாகவே மாறும் பருவத்திற்கு ஏற்ப பசுமையாகும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் கடலில் கலக்கப்படும் மாசுகள் காரணமாகப் பவழப் பாறைகள் புத்துருவம் பெறும் சாத்தியம் குறைவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் அதிகமாகவும் அற்புதமாகவும் பவழப் பாறைகள் மலிந்துள்ள கடல் பகுதியில் லட்சத்தீவுகளும், மன்னார் வளைகுடாவும் முக்கியமானவை. இந்த இரண்டு இடங்களிலுமே பவழப் பாறைகள் வெளுத்து வருகின்றன. எனினும் லட்சத்தீவுகளின் நிலை மிகவும் மோசமாம். லட்சத்தீவுகள் கேரளக் கடற்கரையின் மேற்குப் பகுதி அரபிக் கடலில் உள்ளன. இது கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் மீன் பிடிப்புப் பகுதியாகும்.
உலக இயற்கை வளப் பாதுகாப்பு நிதியம் (ரர்ழ்ப்க் ரண்க்ங் ஊன்ய்க்) பவழப் பாறைகளின் பண மதிப்பை கணித்துள்ளது. அந்தக் கணக்குப்படி, அகில உலகிலும் பவழப் பாறைகளின் சொத்து மதிப்பு 800 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சுமார் 85 கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவுக்கும் பவழப் பாறை உயிர்ச்சூழல் அமைப்பு வழிவகை செய்கிறது.
உலகத்தில் சுமார் 100 கரையோரத் தீவு நாடுகளில் சுற்றுலா மற்றும் மீன் பிடிப்புகளுக்கு இத்தகைய பவழப் பாறைகள் ஆதாரங்களாயுள்ளன. சுமார் 15 சதவீத தேசிய வருமானத்தை மேற்படி நாடுகளுக்கு வழங்குவது பவழப் பாறைகளே.
பவழப் பாறைகள் ஆண்டுதோறும் சுமார் 30 பில்லியன் டாலர் வருமானத்தை அகில உலகுக்கும் அள்ளித் தந்தது. பவழப் பாறை வெளுக்கத் தொடங்கியதிலிருந்து சுமார் 50 சதவீதம் வருமானம் குறைந்துவிட்டது. மிகவும் அதிக நஷ்டத்தை ஆஸ்திரேலியாவும், தென் கிழக்காசியத் தீவுகளும் அடைந்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள கடல் பகுதி பவழப் பாறை சுமார் 2,330 ஹெக்டேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பவழப் பாறைகள் வழங்கும் தேச வருமானம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர். எனினும் இந்தியாவில் லட்சத்தீவுகளிலும், மன்னார் வளைகுடாப் பகுதியிலும் பவழப் பாறைகள் வெளுத்து வருகின்றன.
லட்சத்தீவுப் பகுதியில் பவழப் பாறைகள் வெளுத்துவிடவில்லை என்ற எண்ணத்தில் இடி விழுந்தால் போல் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆழ்கடல் ஆய்வு முடிவு வெளிப்படுத்தியுள்ளது.
மைசூரில் அமைந்துள்ள தேசிய இயற்கை வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் கடல் வள ஆய்வு விஞ்ஞானி ரோஹன் ஆர்தர் லட்சத்தீவுகளில் உள்ள பவழப் பாறைகளை ஆழ்கடலுக்குள் சென்று ஆராய்ந்துள்ள முடிவின்படி, உலகிலேயே அதிக அளவில் பாதிப்புகளை லட்சத்தீவுகள் சந்தித்துள்ளன. அந்த அளவுக்கு அரபிக் கடல் மாசு படிந்துள்ளது. எதிர்காலத்தில் லட்சத்தீவுகளை மறுசீரமைப்பு செய்வதற்கும் இடமில்லையாம்.
மைசூர் நிறுவனம் மட்டுமல்ல; மைய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சரகத்தின் ஒரு பிரிவான கடல் வளப் பாதுகாப்புத் துறை விஞ்ஞானி பி. கிருஷ்ணன், தமிழ்நாட்டில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட் ஆகியோரின் ஆழ்கடல் ஆய்வுகள் ரோஹன் ஆர்தர் ஆய்வுகளை உறுதி செய்துள்ளன.
"இரண்டு தலைமுறைக்குப் பின் காலநிலை மாற்றத்தின் விளைவாலும் மாசாகி வரும் அரபிக் கடல் விளைவாலும் பலியான முதல் அகதிக் கூட்டம் கேரளத்து மீனவர்களாகத்தான் இருப்பார்கள்' -- என்று ரோஹன் ஆர்தர் உறுதிபடக் கூறுகிறார்.
அநேகமாக, அடுத்த பலி அரபிக் கடல் சங்கமமாகும் இந்து மகா சமுத்திரத்தின் மன்னார் வளைகுடா - ஸ்ரீலங்கா. உலகளாவிய கடல் ஆய்வு மையம் கோடிட்டுக் காட்டியுள்ள 36 கடல் தீவுகளில் மன்னார் வளைகுடாவும் ஒன்று. அதேசமயம் அந்த அளவு பாதிப்பில்லை என்றாலும், வங்காள விரிகுடா - அந்தமான் நிக்கோபார் தீவுகளின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
2017 முதல் 2030 வரை வங்காள விரிகுடா - அந்தமான் நிக்கோபார், பசிபிக் சமுத்திரத்தின் மேற்குப் பகுதித் தீவுகளிலும் பவழப் பாறைகள் வெளுத்துப் போகும் ஆபத்து இருக்கிறது. அழிவு படிப்படியாகவும் மெதுவாகவும் தொடங்கியுள்ளதாம்.
பவழப் பாறைகள் வெளுப்பது ஏன் என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள், ஆழ்கடலில் வெப்பம் கூடி வருவதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய நிலையில் கடற்கரைப் பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாகி வருகிறது. கடல் மாசாகி வருவது ஒருபுறம். காலநிலை மாற்றம் மறுபுறம்.
ஆழ்கடல் வெப்பம் 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் என்பது இயல்பு மீறியதாக எண்ணப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் கடல் தாங்கி வரும் மாசு கலந்த வெப்ப நிலை அளவில் உள்ள எரிசக்தி ஏறத்தாழ ஒவ்வொரு நிமிஷமும் ஒரு அணுகுண்டு விழுந்து உருவாக்கும் எரிசக்திக்குச் சமம். இப்படிப்பட்ட மிகுதி வெப்பம் பவழப் பாறைகளை அதிர்ச்சியுறச் செய்து கடலின் பசுமையாகிய பவழப் பாறைகளை அழிக்கக் காரணமாயுள்ளது.
புவி வெப்பமாகும் நிகழ்ச்சி நின்றபாடில்லை. சிலர் மரங்களை நட்டுவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்கின்றனர். மரம் நட வேண்டியதுதான். ஆனால் அது முழுமையான தீர்வு இல்லை. வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் எரிசக்தி நுகர்வு குறைய வேண்டும்.
குறிப்பாக மீண்டும் புதுப்பிக்க முடியாத எரிசக்திப் பயன்பாடாகிய நிலக்கரி, டீசல், கச்சா எண்ணெய்ப் பயன்பாடு குறைய வேண்டும். சூழலுக்குப் பகையில்லாத மாற்று எரிசக்திப் பயன் உயர்ந்தாக வேண்டும். மாற்று எரிசக்திப் பயன்பாடு இல்லாமல் நிலக்கரி - கச்சா எண்ணெய் - டீசல் பயன்பாடு உயர உயர புவி வெப்பமாகும் நிலையைக் கட்டுப்படுத்த முடியாது.
தமிழ்நாட்டில் வறட்சியின் கோரத் தாண்டவம் கண்ணில் தெரிகிறது. இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் பங்குனி சித்திரையில் தொடங்கி வெப்ப நிலை 43 டிகிரி செல்சியசைத் தொட்டு விடுவதைப் பார்க்கிறோம். உலக இயற்கை வள நிறுவனம் (பட்ங் ரர்ழ்ப்க் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங்ள் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங்) புவிவெப்பமாதல் - கடல் மாசுகள் காரணமாக "உலகத்தில் உள்ள பவழப் பாறைகளில் 90 சதவீதம் 2070-இல் அழிந்து விடும். மீனவர்களின் வாழ்வாதாரம் மாயமாக மறையும்...' என்று எச்சரித்து வருகிறது.
கங்கையை சுத்தம் செய்ய வேண்டுமென்று தினமும் குரல்கள் வருகின்றன. கங்கை சுத்தமானதா இல்லையா என்பது அடுத்த கேள்வி. இருப்பினும் ஒரு முயற்சி தெரிகிறது. இவ்வாறே கடலைத் தூய்மைப் படுத்துவோம் என்று ஒருவரும் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.
எண்ணெய்க் கப்பல்களின் கசிவுகள் ஒரு புறம். கடற்கரை நகரங்களின் சாக்கடைக் கழிவு நீர் வழங்கும் மாசு மற்றொரு புறம். நியாயமாகப் பார்த்தால் கடலில் கலப்பதற்கு முன் நகரக் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இந்திய நகரங்களில் ஓடும் பெரு நதிகளிலும் சாக்கடைக் கழிவுநீர் கலந்து இறுதியில் கடலில்தான் சங்கமமாகிறது. கடல்வாழ் உயிரினங்களின் குறிப்பாக மீனினங்களின் காப்பகங்களான பவழப் பாறைகள் வெளுத்து விடுமானால் மீன் உற்பத்தி குறையும்.
பவழப் பாறைகளைக் காப்பாற்ற ஒரு இயக்கம் மீனவர் சமுதாயத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். எங்கெங்கே நதிகள் கடலில் கலக்கின்றனவோ அங்கெல்லாம் நதி நீரின் கடல் சங்கமத்திற்கு முன் சுத்திகரிப்பு இல்லாமல் கலக்கக் கூடாது என்ற போராட்டத்தைத் தொடங்கினால்தான், கடல் மீன்களைக் காப்பாற்ற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.