தவறு செய்தவனை முச்சந்தியில் நிற்க வைத்து தலையை வெட்டும் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா? ‘இல்லை', என்கிறது புள்ளிவிவரங்கள். அந்த நாடுகளில், அளிக்கப்படும் தண்டனை, பாதிக்கப்பட்டவரின் பழியுணர்ச்சிக்கு அளிக்கப்படும் மருந்தாக மட்டுமே இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனையின் கொடுமை தெரியாதா? தெரிந்தும் அவர்கள் தவறில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களது சிந்தனையில் நிரம்பியிருக்கும் மூர்க்கத்தனத்தையும், மிருகத்தனத்தையுமே இது காட்டுகிறது. ஆகையால், தண்டனைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக குற்ற சிந்தனையிலிருப்பவர்களை அதிலிருந்து வெளிக்கொணர முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதாவது, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை. குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு மனமாற்றம்.