அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டதா? என்ன சொல்கிறது தேர்வாணையம்?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டது என்று தவறாக சித்தரிக்கப்படுவதாக கருத்து எழுந்துள்ளது.

Updated On :

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டது என்று தவறாக சித்தரிக்கப்படுவதாக கருத்து எழுந்துள்ளது. ஆனால் தமிழ் தெரியாதவர்கள் குரூப்-2 , 2-A தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடதிட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் பாட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்க்கவும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்க்கவும் முதன்மைத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்காக வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.

அப்படி தேர்வு பெறாதவர்களின் அடுத்த தாள் திருத்தப்படாது, அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் மட்டுமே குரூப்-2 தேர்வு எழுத முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழை கட்டாயம் படிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வாணையத் தரப்பு விளக்கம்:

குரூப்-2 மற்றும் குரூப்-2எ-க்கு (நேர்முகத்தேர்வு இல்லாதா பணியிடங்கள்) ஒரே தேர்வு.

Story image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II மற்றும் IIA அதாவது, நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக, அதாவது, முதல்நிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றியுள்ளது.

இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரையமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. எனவே இரண்டு தெரிவுகளுக்கும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Story image

புதிய பாடத்திட்டம்- தமிழுக்கும் தமிழகத்திற்கும் முக்கியத்துவம் இதுநாள் வரை தொகுதி II மற்றும் IIA முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தேர்வாக முடியும்.

அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மைத் (Mains) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் (Prelims) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறளுக்கு முக்கியத்துவம்:

மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

முதன்மை (Mains) எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை:

மேற்படி தெரிவுகளில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும், தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுவதால், மேற்படி தெரிவின் முதன்மைத் (Mains) தேர்வில், தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு; சுருக்கி எழுதுதல்; கட்டுரை எழுதுதல் ; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றி கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்துவம்:

முதன்மை எழுத்துத் தேர்விலும், தமிழுக்கும், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பரியம், நாடகக் கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 
இவ்வாறு தேர்வாணைய தரப்பில் செயலர் க. நந்தகுமார், தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.