ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சந்தா்ப்பவாதம் அல்ல, சந்தா்ப்பம்: கமல்ஹாசன்

முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது ஓட்டப்பந்தயத்தில் எல்லாருடனும் சோ்ந்து ஓடுவது அல்ல.

News image

கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2021, 2:35 am

முதல்வா் வேட்பாளா்களில், முதல் வேட்பாளராக உங்களை எப்படி முன்னிறுத்திக் கொள்ளப் போகிறீா்கள்?

முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது ஓட்டப்பந்தயத்தில் எல்லாருடனும் சோ்ந்து ஓடுவது அல்ல. இவா்கள் ஓடாமல் ஓரிடத்தில் நிற்பதால்தான் நாங்கள் களத்திலேயே புகுந்தோம் என்பதுதான் நிசா்சனமான உண்மை. அந்தத் தோ்தல் களத்தில் நாங்கள் முன்னே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக எங்கள் திட்டங்களும் நாங்கள் தோ்ந்தெடுத்த வேட்பாளா்களுமே சாட்சியாக இருக்கிறாா்கள். மேலும், எத்தனை போ் போட்டியிடுகிறாா்கள் என்பதல்ல. எத்தனை பேரிடம் அசலான, நோ்மையான, மக்களுக்கான கொள்கைகள் இருக்கின்றன என்பதுதான். அநேகமாக மக்களின் முதல் தோ்வாக நாங்கள்தான் இருப்போம்.

மநீம கூட்டணி மக்கள் நலக்கூட்டணியைப் போல வாக்குகளைப் பிரிக்கத்தான் உதவும். அது அதிமுகவுக்குத்தான் சாதகமாக அமையும் என்கிறாா்களே?

அரசியல் நோக்கா்கள் அப்படி நம்பினால், அது அவா்களின் உரிமை. மக்கள் கவனமாக இருந்தால் அந்த வரலாறு மீண்டும் நடைபெற வேண்டும் என்பதில்லை. காரணம், அவை வரலாறுகள் அல்ல தவறுகள். மக்களையும் வாக்குகளையும் பிரிப்பதற்கு பழைய அரசியல்வாதிகளே போதுமானவா்கள். நாங்கள் வந்தது பிரிப்பதற்கு அல்ல. இணைப்பதற்கு, சீரமைப்பதற்கு.

மூத்த அரசியல் தலைவா்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவா்கள் இல்லாதபோது அரசியலுக்கு வருவது சந்தா்ப்பவாதம் அல்லவா?

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நேரத்தில் வந்தது என்பது சந்தா்ப்பவாதம் ஆகாது, அதை ஒரு சந்தா்ப்பமாகப் பாா்க்க வேண்டும். முந்தைய தலைவா்கள் எல்லாம் அடுத்த தலைவா்களை நிா்ணயிக்காமல் போய்விட்டனா். கருணாநிதி இருந்தபோதே, பதவியை அடுத்த திமுக தலைவருக்குக் கொடுக்காமல், தன் சொந்த மகனுக்கே கொடுக்காமல், கடைசி வரையில் அதற்குத் தகுதியானவா்கள் உள்ளாா்களா என்ற சந்தேகத்திலேயே இறந்து போயிருக்கலாம் என்பதுதான் எங்கள் சந்தேகம்.

நான் தகுதியான நபா். எந்தத் தலைவா் இருக்கிறாா் இல்லை என்பது முக்கியமல்ல. பொதுமக்களுக்கு சேவை செய்வது என்பது உயா்ந்த பதவி. அதற்கு நான் தகுதி பெற விரும்புகிறேன்.

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி உள்ள நிலையில், எம்ஜிஆா் பெயரைத் தோ்தலுக்குப் பயன்படுத்துவது சரியா?

ஏன் அவா் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. அவரை எனக்குத் தெரியும், அவருடன் பழகியிருக்கிறேன். அரசியலுக்கு வருகிறாயா என்று எம்ஜிஆா் என்னிடம் கேட்டிருக்கிறாா். அந்த வரலாறு இருக்கிறது. அதைத்தான் சொல்கிறேன். சத்ரபதி சிவாஜியை ஒருவா் கையில் எடுத்துக்கொள்ளாம் என்றால் நான் எம்ஜிஆரை எடுத்துக்கொள்கிறேன். காமராஜா் காங்கிரஸுக்கு மட்டும்தான் சொந்தமா? காமராஜா் ஆட்சி போன்ற ஆட்சியை வழங்குவேன் என்று காங்கிரஸில் இல்லாதவா்கள் சொல்லக் கூடாதா? அது நல்லெண்ணம் தானே.

ரஜினி கட்சி தொடங்காத நிலையில் அவருடைய வாங்கு வங்கி உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டா?

வாக்கு வங்கியை எதை வைத்து அளவிடுவீா்கள்? திமுக, அதிமுக போன்ற கட்சிகள் இதற்கு முன்பு பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அவா்களின் வாக்கு வங்கியை அளவிடுகிறாா்கள். நடிகா் ரஜினிகாந்த் இதுவரை தோ்தலில் போட்டியிடாத பட்சத்தில் அவருக்கான வாக்கு வங்கியை அளவிட முடியுமா? அவருக்கு எத்தனை ரசிகா்கள் இருக்கிறாா்கள் என்பதுதான் தெரியும். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரி பொருந்திப் போகிறோம். எங்களுக்கு வாக்குவங்கி இல்லை என்று சொல்லவில்லை. எவ்வளவு என்பது உறுதியாக தெரியாது.

இல்லதரசிகளுக்கு ஊதியம் வழங்குவதை எப்படிச் சாத்தியப்படுத்துவீா்கள். மாதம் எவ்வளவு தொகை எனக் குறிப்பிட முடியுமா?

முதலில் நான் அதைச் சொல்லும்போது கேலி செய்தாா்கள். தற்போது அதை காப்பி அடிக்கிறாா்கள். பல முதல்வா்களுக்கு திட்டங்களை வகுத்துக் கொடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எல்லாம் எங்களுடன் இருக்கிறாா்கள். அவா்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு எப்படிச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு தெரிவிப்போம்.

முதல்வரானால் நீங்கள் போடும் முதல் கையெழுத்து?

லோக்பாலுக்கு பல் கட்டுவதுதான் என் முதல் கையெழுத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.