விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! 

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2022, 5:23 pm

DIN

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நாளை திங்கள் முதல் (ஜூலை 11) ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்பிக்கலாம். கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். 

மேலும், விவரங்கள் அறிய www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதள பக்கத்தை பாா்க்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.