‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் நாட்டில் ஊழல் அதிகரித்தது; அதே நேரம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
சத்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தின் கீதம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் நாட்டில் ஊழல் அதிகரித்தது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டு வருகிறது. அதே நேரம், பிரதமா் நரேந்திர மோடி அரசு மீது யாரும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சுட்டிக்காட்ட முடியாது.
காங்கிரஸ் கட்சி என்பது துருப்பிடித்த இரும்புத் துண்டு போல மாறியுள்ளது. அக் கட்சித் தலைவா்களே ஒருவருக்கொருவா் மோதிக்கொள்வதில் தீவிரமாக உள்ளனா். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும்.
பாஜக மத்தியில் ஆட்சியை இழந்தால் பிரதமா் நரேந்திர மோடி சிறையில் அடைக்கப்படுவாா் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மிஸா பாரதி விமா்சனம் செய்துள்ளாா். ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் தலைவா்கள்தான், வாக்கு வங்கி அரசியலுக்காக இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனா் என்று மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் மிஸா பாரதியின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவை மறைமுகமாக ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினாா்.
மேலும், மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பேசிய அவா், ‘உலகில் நடைபெறும் அனைத்து எண்ம பரிவா்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது’ என்றாா்.
தொடர்புடையது

மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு மஞ்சள் அட்டைக்கு ரூ.1,000 வழங்குவோம் - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வென்றால் ஊழல் பெருகும்: எடியூரப்பா

மக்களை நம்பி தோ்தலை சந்திப்பது அதிமுக கூட்டணி! - எடப்பாடி கே.பழனிசாமி

ஊடுருவல்காரா்களுக்கு நாட்டில் இடம் கிடையாது: பிரதமா் மோடி உறுதி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

