திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில் முடிவு தெரிய ஒன்றரை மாதம் காத்துக்கிடப்பது பற்றி...
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் செடேமா கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் புகைப்படக்காரரைக் கண்டதும் சிரிக்கும் நாகர் மக்கள்! / ஏ.பி.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் செடேமா கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் புகைப்படக்காரரைக் கண்டதும் சிரிக்கும் நாகர் மக்கள்! / ஏ.பி.

2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவுக்கு வந்துவிட்டது. இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு இனி நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடந்து முடியும் வரை, கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம், காத்திருக்க வேண்டியதுதான்.

தமிழ்நாடு (39), உத்தரகண்ட் (5), அருணாசலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத் தீவுகள் (1) ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் மத்திய ஆளுகைப் பகுதிகளில் முழுவதுமாக அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நிறைவு பெற்றுவிட்டது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் செடேமா கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் புகைப்படக்காரரைக் கண்டதும் சிரிக்கும் நாகர் மக்கள்! / ஏ.பி.
மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

இவை தவிர, ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8, மத்தியப் பிரதேசத்தில் 6, அசாம், மகாராஷ்டிரத்தில் தலா 5, பிகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, மணிப்பூரில் 2, திரிபுரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா 1 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு முடிந்துள்ளது.

அல்லாமல் அருணாசலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் புதிய சட்டப்பேரவைகளைத் தேர்ந்தெடுப்பதற்காகவும் முதல் கட்டத்திலேயே வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

மிக அதிக அளவாக தமிழ்நாட்டில்தான் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டிருக்கிறது.

எனினும், நாடு முழுவதும் அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்து முடிந்த பிறகு, ஜூன் 4 ஆம் தேதிதான், இன்று நடந்த தொகுதிகளின்  வாக்குகள் எண்ணப்படும்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் செடேமா கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் புகைப்படக்காரரைக் கண்டதும் சிரிக்கும் நாகர் மக்கள்! / ஏ.பி.
அமைதியாக நடந்து முடிந்தது முதல்கட்ட மக்களவைத் தேர்தல்!

அதுவரை... அதுவரை இந்தத் தொகுதியில் இவர் வெற்றி பெறுவார், அந்தத் தொகுதியில் அவர்தான் வெற்றி பெறுவார், இல்லை, இல்லை மொத்தமும் இவர்கள்தான், அல்ல அவர்கள்தான் என்று பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

மக்கள் பரவாயில்லை, பேசிக்கொண்டே அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். அரசியல்வாதிகள்தான் பாவம், அடிவயிற்றில் நெருப்பைக் கட்டினாற்போல இருக்க வேண்டும்.

ம். காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை, அடுத்த 45 நாள்களுக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com