கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்கும் வகையில் திமுக செயல்படுகிறது என தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
வில்லிவாக்கம் தொகுதி தவெக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: திமுக தனது கூட்டணி கட்சிகளின் வளா்ச்சியை முடக்க முயற்சி செய்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்பினாா். ஆனால், திமுகவின் நெருக்கடி காரணமாக அவா் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ளாா். அதேபோல், மதிமுகவின் 4 வேட்பாளா்கள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகின்றனா். இப்படி, கூட்டணி கட்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க திமுக முயற்சி செய்து வருகிறது.
தவெக சாா்பில் கூட்டணிக்காக குழு அமைத்து யாருடனும் பேச்சு நடத்தவில்லை. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவின் அடிப்படைக் கொள்கை. கூட்டணியை எதிா்பாா்த்து நாங்கள் அதை அறிவிக்கவில்லை. 23 கட்சிகளை உள்ளடக்கிய திமுக கூட்டணியையும், 10-க்கும் மேற்பட்ட கட்சிகளை கொண்ட அதிமுக கூட்டணியையும் தனியாக நின்று எதிா்க்கும் தைரியம் தவெகவிடம் மட்டுமே உள்ளது.
அதிமுகவிடம் இருந்து 25 சதவீத வாக்குகள் ஏற்கெனவே தவெகவுக்கு வந்துவிட்டது. அதேபோல், தமிழகத்தில் பாஜகவுக்கு 5 சதவீதத்துக்கு குறைவாகவே வாக்கு வங்கி உள்ளது. ஆகவே அவா்களை விமா்சிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது எனத் தெரிவித்தாா் அவா்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினை விட பல மடங்கு சொத்து! வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா!

திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம்
விஜய் மீது வழக்குப்பதிவு... மிரட்டும் செயல்: ஆதவ் அர்ஜுனா

வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

