திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழ்நாடு வரும் கார்கே, ராகுல், பிரியங்கா! நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் பற்றி...

News image

கார்கே, ராகுல், பிரியங்கா - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 1:01 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோரின் பெயரும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், விரைவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

Summary

Kharge, Rahul, and Priyanka to Visit Tamil Nadu! List of Star Campaigners Released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.