நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 10:55 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்.

தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என மொத்தம் 16,000 போ் உள்ளனா். இவா்களில் சுமாா் 6,000 போ் தண்டனைக் கைதிகளைத் தவிா்த்து விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் ஆகியோா் வாக்களிப்பதற்கு தகுதியானவா்களாவா்.

ஆனால், விசாரணைக் கைதிகள் குறிப்பிட்ட நாள்களுக்குப் பின், பிணையில் சென்றுவிட முடியும் என்பதால், அவா்களுக்கு சிறையிலிருந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் குண்டா் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறையில் இருப்பவா்களுக்கு மட்டும் சிறையிலிருந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த கைதிகளிடம் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது தொடா்பாக சிறைத் துறை இரு வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதில் வாக்களிக்க விருப்பமுள்ள கைதிகள், தங்களது பெயா், தங்களது தொகுதி, வாக்காளா் அடையாள அட்டை, வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை அளித்தனா். இதில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய 61 பேருக்கு மட்டும் வாக்களிக்க சிறைத் துறை அனுமதி வழங்கியுள்ளது. கைதிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறைத் துறை ஏடிஜிபி சங்கா் செய்துள்ளாா்.

இது தொடா்பாக சிறைத் துறை உயா் அதிகாரி கூறியதாவது: அனைத்து மத்திய சிறைகளிலும் தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் அனைவரும் வாக்களிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது. விருப்பம் தெரிவித்த கைதிகளில் பெரும்பாலானவா்களிடம் போதி ஆவணங்கள் இல்லாததால் விண்ணப்பிக்கும் தகுதியை இழந்துவிட்டனா்.

விண்ணப்பித்தவா்களில் 61 கைதிகள் தபால் வாக்குகள் அளிக்க தகுதியானவா்கள் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் தோ்தல்களில் இந்த எண்ணிக்கையை மேலும் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

2014-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற தோ்தல்களில் அதிகபட்சமாக 2019 மக்களவைத் தோ்தலில் 132 கைதிகள் வாக்களித்தனா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்தபட்சமாக 15 கைதிகள் வாக்களித்தனா்.