ஐசிஎம்ஆர் வேலைவாய்ப்பு அறிவிப்பு: டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் சென்னை அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 3 திட்ட பணியாளர் செவிலியர் மற்றும், திட்ட தொழில்நுட்ப அதிகாரி பணி
ஐசிஎம்ஆர் வேலைவாய்ப்பு அறிவிப்பு: டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் சென்னை அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 3 திட்ட பணியாளர் செவிலியர் மற்றும், திட்ட தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) 

மொத்த காலியிடங்கள் : 03 

பணி : Project Staff Nurse - 02

தகுதி : டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:  மாதம் ரூ.31,500 

பணி: Project Technical Officer (Social Work)- 01

தகுதி: Social Work, Social Sciences பிரிவில் இளங்களை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.32,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 13.08.2021 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR - NIE, Chennai 

மேலும் விபரங்கள் அறிய http://nie.gov.in அல்லது https://nie.icmr.org.in/images/pdf/careers/No-NIE-Advt-July2021-38.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com