விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. 

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2021, 7:06 am

தினமணி

தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத்துறை

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர்18 முதல் 35 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, முஸ்லீம் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த கால்நடைப் பராமரிப்பு,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை - 35

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/APPLICATION_FOR_THE_POST_OF_OFFICE_ASSISTANT1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.