கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மிஸ் பண்ணிடாதீங்க... 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கால திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பாண்டில் 9494 பணியிடங்களை நிரப்புவதற்கான, 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கால திட்ட அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 11:03 am

தினமணி

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பாண்டில் 9494 பணியிடங்களை நிரப்புவதற்கான, 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கால திட்ட அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தேர்வு ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் 2022 ஜூன் இரண்டாவது வாரத்தில் போட்டித் தேர்வு நடைபெறுகிறது. அதாவது 3902 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என 4989 பணியிடங்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 167 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும். 

Story image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான  அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும். 

பொறியியல் கல்லூரிகளில் 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும்.  

ஆசிரியர் பணியின் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இந்த உத்தேச தேர்வுகால திட்ட அட்டவணை பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் தேர்வர்கள் தாங்கள் விரும்பும் பணியிடங்களுக்கு முன்னுரிமை அளித்து விண்ணப்பிக்கவும், போட்டித்தேர்வுக்கு திட்டமிட்டு தயாராக உதவியாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.