திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கடற்படையில் கொட்டிக்கிடக்கும் 2500 வேலைவாய்ப்புகள்: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 2500 செய்லர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2022, 2:58 pm IST


இந்திய கடற்படையில் காலியாக உள்ள 2500 செய்லர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: Sailors(Artificer Apprentice)
காலியிடங்கள்: 500
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: 01.08.2002 க்கும் 31.07.2005க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். 
தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Sailors (SS-Recruit) 
காலியிடங்கள்: 2000
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: வயதுவரம்பு: 01.08.2002 க்கும் 31.07.2005க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். 
தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

உடற் தகுதிகள்: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையுடன் கூடிய மார்பளவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 60. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2022

மேலும் விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.