வங்கியில் வேலை வேண்டுமா? நைனிதால் வங்கியில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி, கிளார்க் வேலை
By | Published On : 23rd February 2022 11:35 AM | Last Updated : 23rd February 2022 11:35 AM | அ+அ அ- |

இந்தியாவில் செயல்பட்டு வரும் பட்டியலிடப்பட்ட தனியார் துறையைச் சார்ந்த
வணிக வங்கி நைனிதால் வங்கி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியின் துணை வங்கியான நைனிதால் வங்கியில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி, கிளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainees
காலியிடங்கள்: 50
சம்பளம்: 30,000
பணி: Clerks
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.17,900
வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்க | ரூ.63,840 சம்பளத்தில் SBI வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்புகள்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று, நிதி நிறுவனம், வங்கியில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மார்ச் மாதம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nainitalbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2022
இதற்கும் விண்ணப்பிக்க | குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?