ராணுவத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட 453 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி)
மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி)
Published on
Updated on
1 min read

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட 453 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிவிப்பு எண்: 11/2025 -CDS-II

பணி:Indian Military Academy

காலியிடங்கள்: 100

தகுதி: ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Indian Naval Academy

காலியிடங்கள்: 26

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Air Force Academy

காலியிடங்கள்: 32

தகுதி: இயற்பியல், கணிதம் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Officer's Training Academy - SSC (Men)

காலியிடங்கள்: 276

தகுதி: ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer's Training Academy SSC (Women)

காலியிடங்கள்: 19

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 2.7.2001-க்கும் 1.7.2007-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

எழுத்துத் தேர்வு: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் எதிரிகால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கணிவழித் தேர்வு(சிடிஎஸ்) தேர்வு நடைபெறும் நாள்: 14.9.2025

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.6.2025.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com