பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
Published on
Updated on
1 min read

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Engagement of Apprentices(2025-26)

மொத்த காலியிடங்கள்: 4,500 (தமிழ்நாட்டிற்கு 202, புதுச்சேரிக்கு 2 இடங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.5.2025 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது வங்கி விதிமுறையின்படி ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான நாள், இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு அவர்களது மின்னஞ்சலுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். எழுத்துத் தேர்வு வரும் ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.

பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்: தமிழபயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, சேலம், தேனி, தென்காசி, அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல் போன்ற இடங்களில் அமைந்துள்ள வங்கியின் கிளைகளில் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் முதலில் தங்களது தகுதி குறித்த விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com