/

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

'பால்மர் லாரி' லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

பால்மர் லேவையர் நிறுவனத்தில் பணி - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 2:49 pm IST

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'மினிரத்னா-1' அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான 'பால்மர் லாரி' லிமிடெட் நிறுவனம், தொழில்முறை நிர்வாகம், பல இடங்களிலான செயல்பாடுகள் மற்றும் பல்வேறு வணிகத் துறைகளைக் கொண்ட ஒரு பன்முகப்படுத்தப்பட்ட குழுமமாகும். உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரு துறைகளிலும் தனது செயல்பாட்டில் முன்னிலை வகித்து வருவதுடன், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் லாபத்தன்மைக்கான சிறப்பான வரலாற்றுப் பதிவைக் கொண்டிருப்பதுடன் வாடிக்கையாளர்கள் சேவையில் உயரிய தரநிலைகள், புதுமையான கண்ணோட்டம் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க மனிதவளம் ஆகியவையே நிறுவனத்தின் பல்வேறு வணிகத் துறைகளில் தலைமைத்துவ நிலைக்கு துணைபுரிந்து வருகின்றன.

இந்த நிறுவனத்தில் அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னை மற்றும் பல்வேறு கிளைகலில் இளநிலை அதிகாரி, உதவியாளர், துணை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: BL/Rect./T & V/FTC/26-27-05/01

பணி: Chief Operating Officer(Travel & Vacations)

காலியிடம் : 1

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் அல்லது எம்பிஏ அல்லது மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 19 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 57-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer(Operations)

காலியிடம் : 1

வயது : 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Officer

பிரிவு: Travel

காலியிடங்கள்: 2

தகுதி: ஏதாவதொரு

பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(FICO Functional)

காலியிடம்: 1

தகுதி: பொறியியல் துறையில் ஐடி, கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது சிஏ அல்லது எம்சிஏ, எம்பிஏ(நிதியியல்) தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Commercial)

காலியிடம்: 1

ஏதாவதொரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் அல்லது எம்பிஏ அல்லது மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager(Marketing)

காலியிடங்கள்: 1

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முழுநேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது மேலாண்மையில் முதுகலை, சந்தைப்படுத்தல், வழங்கல் சங்கிலி மேலாண்மை , தளவாடங்கள் போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager(HR)

காலியிடங்கள்: 1

தகுதி: மனிதவள மேலாண்மை, தொழிலாளர் உறவுகள், திட்ட மேலாண்மை, தொழிலாளர் ஆய்வுகள், மாற்றம் மற்றும் தலைமைத்துவம் அல்லது சமூகப் பணி, சமூக நலத்துறையில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 22-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Officer(Electrical & Maintenance)

காலியிடங்கள்: 1

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 'சி' லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் SC /ST பிரிவினருக்கு 5 வருட மும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவின ருக்கு 10 வருடமும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.balmerla wrie.com/careers/current openings என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.6.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரகங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Regarding the Employment Notification from Balmer Lawrie & Co. Ltd.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.