
இந்திய ரயில்வேயில் பாராமெடிக்கல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட 590 துணை மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

இந்திய ரயில்வேயில் பாராமெடிக்கல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Indian Railway
இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட 590 துணை மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பார்ப்போம்...
பணி: Nursing Superintendent
காலியிடங்கள்: 365
சம்பளம்: மாதம் ரூ.44,900 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: Dialysis Technician
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: Health & Malaria Inspector Gr II
காலியிடங்கள்: 43
சம்பளம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: Audiologist & Speech Therapist
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: Pharmacist (Entry Grade)
காலியிடங்கள்: 118
சம்பளம்: மாதம் ரூ.29,200 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: Radiographer X-Ray Technician
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.29,200
பணி: ECG Technician
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.25,500 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: Optometrist
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.25,500 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: Lab Assistant Gr. II
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ.21,700
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இடஒதுக்கீடு சலுகை பெறும் பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கி பிரிவினருக்கு ரூ.250. தேர்வு எழுதிய பின்னர் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
RRB Staff Recruitment Notification Apply Online Started for 590 Nursing Superintendent, Pharmacist and More Posts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






