திருவள்ளூர் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்ட மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Treatment Lab Supervisor
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.19,800
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எஸ்சி லேப் டெக்னீசியன் முடித்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lab Technician
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ. 13,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேப் டெக்னீசியன் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: TB Health Visitor
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.13,300
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பல்நோக்கு சுகாதார பணியாளர் அனுபவம் அல்லது உதவி மகப்பேறு செவிலியர் பணி அனுபவம் அல்லது காசநோய் சுகாதார பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத் தாளில் தயார் செய்து அதனுடன் தகுதி, அனுபவம், சாதி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர், மருத்துவப் பணிகள்(காசநோய்), மாவட்ட காசநோய் மையம், பூவிருந்தவல்லி, சென்னை - 600 056
மேலும் விவரங்கள் அறிய www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
ரூ.81,100 சம்பளத்தில் துணை ராணுவத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
நாளை மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் எங்கு நடக்கிறது தெரியுமா?
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
ரூ.65,500 சம்பளத்தில் மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை வேண்டுமா?
மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!